2025 மே 14, புதன்கிழமை

மரணமடைந்த விரிவுரையாளரின் மனைவிக்கு இடமாற்றம்

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், அப்துல்சலாம் யாசீம்,  ஹஸ்பர் ஏ ஹலீம்

ஏறாவூரில் கடந்த வியாழக்கிழமை (31) விபத்துக்குள்ளாகி மரணமடைந்த மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் கந்தக்குட்டி கோமலேஸ்வரனின் வீட்டுக்கு, கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நேற்று (02) நேரடியாக விஜயம் செய்து, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மரணமடைந்த விரிவுரையாளரின் மனைவி, வாழைச்சேனை  கிண்ணையடியில் அமைந்துள்ள  பாடசாலையில் ஆசிரியராகக் கடமை புரிகின்றமையால், அவரது நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்க்கும் முகமாக, ஆசிரியை வசிக்கும் செங்கலடி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றுக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கும்படி, மாகாண கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X