2025 மே 26, திங்கட்கிழமை

மரதன் ஓடிய மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2017 மே 12 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி, மட்டக்களப்பு, மஞ்சதொடுவாய்  தொழில்நுட்ப கல்லூரியினால் நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட அக்கல்லூரி மாணவன் ஒருவர், மயங்கி விழுந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில், கல்லடி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, உன்னிச்சை கிராமத்தை சேர்ந்த எம்.வினோஜன் (வயது-20) என்ற மாணவனே,  காயங்களுக்குள்ளான நிலையையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் மரதன் ஓட்டப்போட்டியில் 8 மாணவர்கள் பங்குபற்றியதுடன் அவர்கள் அனைவரும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர் என, அக்கல்லூரியின் அதிபர் ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X