2025 மே 07, புதன்கிழமை

மருந்தகங்களுக்கு எச்சரிக்கை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 ஜனவரி 26 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருந்துக் கையாளுகை சட்ட ஒழுங்கு விதிகளை மருந்தகங்களின் உரிமையாளர்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் தவறின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் உணவு மருந்துப் பொருள்கள் பரிசோதகர் ரீ.வரதராஜன் தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக, மருந்தக உரிமையாளர்களுக்கும் அங்கு பணிபுரிவோருக்கும் அரச சட்ட ஒழுங்கு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வுட்டும் கருத்தரங்கு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் இன்று (26) நடைபெற்றது.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து தெளிவூட்டல் செய்த அவர் மேலும் கூறியதாவது,

“இளம் சந்ததியைக் காப்பாற்ற வேண்டிய மருந்தகங்கள், அவர்களுக்குப்  பாதிப்பேற்படும் வகையில் நடந்து கொண்டால் அது சமூகத் தவறாகக் கருதப்படும். அதற்காக சட்ட நடவடிக்கைகளையும் அவர்கசள் எதிர்கொள்ள நேரிடும்.

“சட்டத்தின் அடிப்படையில் மருந்து விநியோகம் சம்பந்தமான சிறந்த நம்பிக்கையை மருந்தகங்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்கென தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

“பொதுமக்களின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய மருந்துப் பொருள்களை விற்பனை செய்தால், இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம், மூன்றாண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“அதிகார சபையிடமிருந்து மருந்தகத்தைக் கொண்டு நடத்துவதற்கு உரிய அனுமதிப்பத்திரம் பெறப்ப்பட்டிருக்காதவிடத்து ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணமும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்

“மேலும், மேற்குறிப்பிட்ட தண்டனைகளுடன் தாம் அத்தவறை மீண்டும் புரியமாட்டேன் என உறுதியுரை தெரிவிக்கும் வகையில் இலங்கையில் வெளியாகும் மும்மொழிப் பத்திரிகைசகளில் விளம்பரம் செய்து மொதுமக்களிடம் பொது மன்னிப்புக் கோர வேண்டும்.

“மேலும், பாடசாலை மாணவர்களையும் இளைஞர், யுவதிகளையும் இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருள் உட்பட பல போதை மாத்திரைகளும் பானங்களும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்து சுகாதாரப் பிரிவு கடும் விழிப்பாய் இருந்து வருகிறது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X