Suganthini Ratnam / 2016 ஜூலை 06 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 24,209 குடும்பங்கள் மலசலகூட வசதியின்றி உள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
இந்நிலையில் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் 55 மில்லியன் ரூபாய் நிதியில் 1,000 புதிய மலசலகூடங்களை கட்டுவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வாகரை, வாழைச்சேனை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி உள்ளிட்ட பிரதேசங்களில் மலசலகூடங்களுக்கான தேவை அதிகம் காணப்படுகின்றது. இப்பிரதேசங்களைச் சேர்ந்த 1,254 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் இ;ந்த வருடம் கட்டப்பட்டுள்ளன.
மேலும், அயல் வீடுகளில் உள்ள மலசலகூடங்களைப் பயன்படுத்துகின்ற 6,952 குடும்பங்களும் பொதுமலசலகூடங்களைப் பயன்படுத்துகின்ற 389 குடும்பங்களும் மலசலகூடங்களைப் பயன்படுத்தாது பொது இடங்களில் மலம் கழிக்கும் 16,868 குடும்பங்களும் உள்ளதாகவும் அவர் கூறினார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago