Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 11 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா, ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக, 16,632 குடும்பங்களைச் சேர்ந்த 57,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த 242 குடும்பங்களைச் சேர்ந்த 691 நபர்கள், மூன்று இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறு மூலை வளாகத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2,296 குடும்பங்களைச் சேர்ந்த 8,564 நபர்களும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,166 குடும்பங்களைச் சேர்ந்த 4,075 நபர்களும், கோறளைப்பற்று செயலாளர் பிரிவில் 924 குடும்பங்களைச் சேர்ந்த 2,989 நபர்களும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 2,916 குடும்பங்களைச் சேர்ந்த 9877 நபர்களும், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,646 குடும்பங்களைச் சேர்ந்த 5,853 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4,260 குடும்பங்களைச் சேர்ந்த 13,923 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 486 குடும்பங்களைச் சேர்ந்த 1,669 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 405 குடும்பங்களைச் சேர்ந்த 1,592 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 546 நபர்களும், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1,112 குடும்பங்களைச் சேர்ந்த 3,670 நபர்களும், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 1,037 நபர்களும், மண்முனை தென்கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 294 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போரதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 260 குடும்பங்களைச் சேர்ந்த 795 நபர்களும், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 604 குடும்பங்களைச் சேர்ந்த 2,167 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இதுவரை 27 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago