2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மாடு மேய்த்தவர் யானை தாக்கி பலி

Editorial   / 2021 ஜூலை 04 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவு குடாவெட்டை வயற் பிரதேசத்தில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் காட்டு யானை தாக்கி மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தன் நாகராசா (வயது 57) என்பவரே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

சடலம் கண்டெடுக்கப்பட்டு சனிக்கிழமை (03) உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வழமைபோன்று மாடு மேய்க்கச் சென்றவர் மாலையாகியதும் வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டபொழுது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் குடாவெட்டை காட்டுப் பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய காட்டுப் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் விவசாய கூலித் தொழிலாளர்கள் மூவர் மரணித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X