2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாடுகளை அறுக்க முனைந்தவர்கள் தப்பியோட்டம்; 4 மாடுகள் மீட்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விலை உயர்ந்த  எருமை, காளை  மாடுகளை அறுப்பதற்குத் தயாரான கும்பலொன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்தபோது, குறித்த கும்பல் தப்பியோடியுள்ளதுடன், எருமை மாடுகள் அடங்கலாக 04 மாடுகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட மாடுகள், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பராமரிக்கப்படுவதுடன், சந்தேகநபர்களை, பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த மாடுகளை, சந்தேகநபர்கள் திருடி வந்திருக்லாமெனத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X