2025 மே 21, புதன்கிழமை

மாணவர்கள் குறித்து கவனயீனம்

பேரின்பராஜா சபேஷ்   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஜனாதிபதி அல்லது பிரதமர் விஜயம் செய்வது என்றால், இரவோடு இரவாக வீதிகள் புனரமைக்கப்படுகின்றன. ஆனால், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வீதிகள் குண்டும் குழியுமாகக் காணப்படுவது தொடர்பாக பலமுறை முறையிட்டும், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை கவனம் செலுத்துவதில்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நேற்று  (26) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை செயலாளர் க.பேரின்பராஜா தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சித் திணைக்களம், முதலமைச்சரின் அமைச்சின் கீழ் உள்ளது. அவர்கள் எழுத்து மூலம்  கட்டளையிட்டாலே, நாங்கள் நிறைவேற்ற முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .