2025 மே 10, சனிக்கிழமை

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Princiya Dixci   / 2022 மார்ச் 24 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு, ஐந்தாம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று (23) மாலை மின்சாரம் தாக்கி, கோகிநாதன் நிதுர்ஷன் எனும் 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு கதவு ஒன்றை பொருத்துவதற்கான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மின்சாரத்தில் பொருத்தப்பட்டிருந்த துளையிடும் கருவியின் வயர் கதவில் இணைக்கப்பட்டிருந்த தகரத்தில் பட்டிருந்த நிலையில் குறித்த தகரத்தில் துளையிடும் கருவியினால் துளையிட முயற்சித்தபோது இளைஞன் மின்சாரத்தில் தாக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இளைஞன் கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் சடலம், பிரேத பரிசோதனைக்கான வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த இளைஞன் கடந்தாண்டு உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று, பொறியியல் துறைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இளைஞனின் மரணம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X