2025 மே 01, வியாழக்கிழமை

மின்னல் தாக்கத்தால் 27 பசுக்கள் இறப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - வாகரை, மாவடியோடைக் கிராமத்தில் மின்னல் தாக்கத்தால் பண்ணையொன்றில் 27 பசு மாடுகள் இறந்துள்ளன என, வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (31) இரவு பலத்த மழையுடன் கடும் இடி, மின்னல் தாக்கம் இருந்தமையால் மக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். மறுநாள் காலை (நேற்று முன்தினம்) தமது மாடுகளை மேய்ச்சல் தரைக்குக் கொண்டு செல்லும் முகமாக தமது பண்ணைக்குச் சென்று பார்த்த போது, 27 பசுக்கள் இறந்திருந்தன என, மேற்படி பண்ணையின் உரிமையாளரான தம்பிஜயா ரஞ்சன் தெரிவித்தார்.

இதனால் தமது குடும்பத்தின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறந்த பசு மாடுகளின் உடலங்களை, வாகரைக் கடற்படையினர் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் புதைத்தனர்.

சம்பவ இடத்துக்கு இன்று (02) காலை வருகை தந்த வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரன், பாதிக்கப்பட்ட பண்ணையாளரையும் அவரது குடும்பத்தினரையும்  சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தமது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினூடக இயலுமான உதவியை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், இவ்விடயம் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, மேலும் உதவிகள் பெற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

-ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .