2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மின்னியல் தகனசாலை அமைக்க கோரிக்கை

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கென மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி கோரிக்கை
முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கோரியுள்ளதாவது,

“மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து மட்டும் இதுவரை சம்பவித்த 202 மரணங்களில் 27 சடலங்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளன.

“இச்சடலங்களை தகனம் செய்வதற்காக மட்டக்களப்பிலிருந்து 100 கி.மீ தொலைவில் பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள மின்னியல் தகனச்சாலைக்கு தகனம் செய்வதற்காக கொண்டு செல்ல
வேண்டியுள்ளது.

“இவ்விடயம் தொடர்பில் பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அப்பிரிவுக்குட்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோரின் முன் அனுமதி பெறப்பட வேண்டியுள்ளதுடன், மின்னியல் தகனத்தை மேற்கொள்ளவற்காக திம்புலாகலை பிரதே சபையிடமிருந்தும் அனுமதியைப் பெற்று, அதன் பின்னரே குறித்த உடலை தகனம் செய்வதற்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.

“மேலும், தகனம் செய்வதற்காக சடலத்தை ஏற்றிச் செல்வதற்கென
வாகனம் ஒன்று தேவை. அத்துடன், சடலத்தை ஏற்றி - இறக்கி உரிய தகனச்சாலைக்கு கொண்டு செல்வதற்கான வைத்தியசாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பிறிதொரு வாகனமும் தேவை. இரு சாரதிகள் மற்றும் 06 உதவியாளர்கள் என ஆளணியினரும் ஒழுங்கு செய்யப்படவேண்டியுள்ளது.

“ஆனால், தற்போது வைத்தியசாலை ஊழியர்களின் வரவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உரிய நேரத்துக்கு உடல்களை தகனம் செய்வதற்காக அனுப்பி வைப்பதில் காலதாமதம் ஏற்படுவதுடன், வைத்தியசாலையின் பிரேத அறையிலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகின்றது.

“எனவே, இந்நிலைமைழய கருத்தில்கொண்டு, எமது மாவட்டத்திலே கொவிட் உடல்களை தகனம் செய்வதற்கு மின்னியல் தகனச்சாலை ஒன்றை நிறுவுவதற்கு பொறுப்புவாய்ந்த அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .