Mayu / 2023 டிசெம்பர் 12 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் பொலிஸார் மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பபடிவம் ஒன்றை வீடு வீடாக வழங்கி தகவல் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு பொலிஸார் முழுவிபரங்களும் அடங்கிய விண்ணப்பபடிவம் ஒன்றை வழங்கி தகவல்களை பெறும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்
பொலிஸ் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் தங்கியிருப்பவர்களின் விபரங்களை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பபடிவம் 1865 ஆம் ஆண்டின் 16 ம் இலக்க பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் 75 வது பிரிவிற்கு அமைவாக செயல்படும் ஆணை எனும் தலைப்பில் விண்ணப்பபடிவம் ஒன்றை வழங்கி பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனகராசா சரவணன்


3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago