2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மீனவர் வாழ்வாதாரம் திண்டாட்டம்

Princiya Dixci   / 2021 ஜூன் 20 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

கிழக்கு மாகாணக் கடற்கரைகளிலும் இறந்த ஆமைகளும் டொல்பின்களும் கரை ஒதுங்குவதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இறந்த ஆமைகளும் டொல்பின்களும் கரை ஒதுங்குவதால் மீன்களை வாங்க மக்கள் அச்சப்படுவதால் மீன் வியாபாரிகள் திண்டாடுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

தமது கடற்பகுதியில் சிலரால் மேற்கொள்ளப்படும் சுருக்கு வலை மீன்பிடிக்கு மத்தியில் தாம் அன்றாடம் செய்து வரும் மீன்பிடித் தொழில் தற்போதைய கொரோனா முடக்கத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில், தீப்பிடித்து எரிந்த எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பாதிப்புகள் தமது கடற்பிராந்தியத்திலும் தென்பட்டுள்ளதால் தாம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக களுதாவளை, கல்லாறு, களுவாஞ்சிகுடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X