Freelancer / 2022 மார்ச் 30 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
அக்கரைப்பற்று - கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் நபரொருவரின் சடலமொன்று நேற்று (29) மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் வழமை போன்று கரைவலை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த சடலம் மீனவர்களின் வலையில் அகப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரைவலை மீனவர்கள் தமது வலையினை கரைக்கு ஒதுக்கிக் கொண்டிருந்த போது சடலமொன்று வலைக்குள் இருப்பதை அறிந்த மீனவர்கள் சடலத்தினை கரைக்கு ஒதுக்கியுள்ளனர்.
கரையொதுக்கப்பட்ட சடலத்தின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் இரத்தக்காயங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சடலம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் கடலின் ஆழப் பகுதியில் இருந்து படிப்படியாக கரையொதுங்கிய போது தமது வலையில் அகப்பட்டிருக்கலாம் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் அம்பாறை தடயவியல் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago