2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மீனவர்களுக்கு ’டப்’ வழங்கல்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஜூலை 15 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டலில், சர்வதேச சந்தையில் மீன் ஏற்றுமதியை அதிகரிக்கும் திட்டத்தில், இலங்கை மீனவர்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், 'டப்' (கைக்கணினி), ஆழ்கடல் படகுகளுக்கு வழங்கும் திட்டம், நாடளாவிய ரீதியில், கடல் தொழில் அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேச மீன்பிடி உரிமையாளர்களுக்குக் கைக்கணினி வழங்கும் நிகழ்வு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நேற்று 14) மாலை இடம்பெற்றது.

அல்அமான் படகு உரிமையாளர் அமைப்பின் தலைவர் எச்.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில் நீரியல்வள மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்தக் கைக்கணினியைப் பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள், எந்த இடத்தில் மீன்பிடிப்பது என்றும், என்ன வகை மீன் என்றும் மீன்பிடித் திணைக்களத்துக்கு இக்கருவி மூலம் தெரியப்படுத்த வேண்டுமென்றும், மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், பல்தினப் படகுகள் 350 இருந்த போதிலும், முதற்கட்டமாக 260 படகுகளுக்கு இக்கைக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X