2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘மீராவோடை வாராந்த சந்தை மாதத்தில் இரண்டு தடவைகள் நடைபெறும்’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை வாராந்த சந்தையை, மாதத்தில் இரண்டு தடவைகள் நடத்துவதற்கு, பிரதேச சபையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மீராவோடையின் பிரச்சினைகள், கருத்து முரண்பாடுகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, கல்குடா அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினருடன் கலந்தாலோசித்து, பிணக்குகளைத் தீர்த்துத் தருமாறு, சபை உறுப்பினர்கள் அனைவரும் நாடியதாகத் தெரிவித்தார்.

அந்தவகையில், மாதத்தில் முதலாவது வாரமும் இறுதியாக வருகின்ற மூன்றாவது வாரமும் இந்த வாராந்த சந்தையை நடத்த வேண்டுமென்று ஆலோசனை வழங்கியிருந்தனர்.

அத்தோடு, ஓட்டமாவடி வர்த்தகர்களுக்கும் போதிய இடங்களை வழங்க வேண்டும் என்றும் கல்குடா அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினரால் எங்களுக்குத் தரப்பட்ட ஆலோசனையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த ஆலோசனையையே, சபையின் விசேட அமர்வில் தீர்மானித்துள்ளோம். எனவே, பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, பள்ளிவாசல்கள், வர்த்தகர்கள், மக்கள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X