2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மீறாவோடை வாராந்த சந்தைக்காக மகஜர் கையளிப்பு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள மீறாவோடை வாராந்த சந்தை, தொடர்ந்தும் நடைபெறவேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி மக்களும் பொது அமைப்புகளும் ஏற்பாடு செய்த பேரணி, மீறாவோடையில் இன்று (20) இடம்பெற்றது.

“வாராந்த சந்தையால் எங்களுக்குக் கிடைக்கும் இலாபத்தைத் தடுக்காதே”, “பிரதேச வாதம் வேண்டாம்”, “ஒற்றுமையைக் குழைக்காதே” போன்ற பதாதைகளை, பேரணியில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

இப்பேரணியில் கலந்துகொண்டோரால், பிரதேச சபைத் தவிசாளருக்கு வழங்கவிருந்த மகஜரை, தவிசாளர் சார்பாக, மீறாவோடை வட்டாரக் குழுப் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டு, அதனை ஓட்டமாவடி பிரதேச சபையில் வைத்து சபைத் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியிடம் கையளித்தனர்.

இதேவேளை, மீறாவோடை வாராந்த சந்தை, இன்று வழமை போன்று இடம்பெற்ற​மை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X