2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’மு.கா அபிவிருத்தி அரசியலிலும் ஈடுபடுகின்றது’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 19 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம் சமூகத்துக்கான உரிமையை மட்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேசிக்கொண்டிருக்காமல், அபிவிருத்தி அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றது என  மு.காவின் தேசிய கொள்கைப் பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனைப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'முஸ்லிம் சமூகத்துக்கான உரிமையை மட்டும் முஸ்லிம் காங்கிரஸ் பேசிக்கொண்டிருக்கவில்லை. அச்சமூகத்துக்குத் தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும்  செய்து வருகின்றது. இந்நிலையில், பல பிரதேசங்களிலும்  அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மு.கா முன்னெடுத்துள்ளது.

இதன் ஓரங்கமாகவே மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனைப் பிரதேசத்திலும் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X