2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மு.கா, மட்டு. தொகுதிக்கு அமைப்பாளர் நியமனம்

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழுலுல்லாஹ் பர்ஹான்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளராக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம், அக்கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வியமைச்சருமான ரவூப் ஹக்கீமினால், அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது.

பொறியியலாளர் சிப்லி பாறூக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராகவும் ஸ்ரீ லங்கா ஷிபா பௌண்டேஷனின் தலைவருமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X