2025 மே 14, புதன்கிழமை

‘மு.காவின் ஓர் ஆசனத்தால் தேசிய அரசாங்கத்துக்கு அங்கிகாரம்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஓர் ஆசனம், தேசிய அரசாங்கத்தை உருவாக்க கூடிய அங்கிகாரத்தை பெற்றுள்ளதாக, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மெலானா தெரிவித்தார்.

கம்பெரலிய கிராமிய எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் வீதிகள், மக்கள் பாவனைக்காக நேற்று (03) கையளிக்கப்பட்ட போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனம் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஓர்ஆசனம் தேசிய அரசாங்கத்தை உருவாக்க கூடிய ஓர் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்ததுடன், இந்த அரசாங்கத்தின் ஸ்த்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் அரசியல் பிரச்சினை ஏற்பட்டு, மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணி அரசைப் பொறுப்பேற்று, அபிவிருத்தி வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்கின்ற நேரத்திலே, அரசாங்கத்தை ஸ்திரமான முறையிலே கொண்டு செல்ல வேண்டிய நிலைப்பாடு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த அடிப்படையிலே, தேசிய அரசாங்கம் சாத்தியப்படக் கூடிய ஒரு விடயமாகுமெனவும் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி இது தொடர்பாக பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X