2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முகாமைத்துவ உதவியாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தொழில்புரியும் முகாமைத்துவ உதவியாளர்கள் சம்பள உயர்வு, பதவியுயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மட்டக்களப்பில் இன்று (18) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

பரீட்சை முறையிலான பதவி உயர்வுகள், “முகாமைத்துவ உதவியாளர் சேவை” என்பதை “முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவை” எனப் பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட கோரிக்களை முன்வைத்து 10க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.

மட்டக்களப்பு சுகாதார அலுவலகத்துக்கு முன்பாக ஆரம்பமான இவர்களின் விழிப்புணர்வுப் பேரணி, மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்குச் சென்று, அங்கிருந்து மட்டக்களப்பு கச்சேரி வரை சென்று நிறைவடைந்தது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்திடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், தமது மகஜரைக் கையளித்ததுடன், ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனிடமும், தமது கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முன் வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X