2025 மே 21, புதன்கிழமை

முச்சக்கர வண்டியுடன் மாடு மோதியதால் விபத்து

நடராஜன் ஹரன்   / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, தாழங்குடா தேவாலயத்தை அண்மித்த பிரதான வீதியில் நேற்றுக் காலை 8:30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மாடொன்று மோதியதில் முச்சக்கர வண்டி, வீதியிலிருந்து தள்ளப்பட்டு பாரிய விபத்துக்குள்ளாகியது.

இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த யுவதி ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி, ஆரையம்பதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி சாரதி, சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

பழுகாமத்தில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று மீண்டும் பழுகாமத்துக்குச் சென்று கொண்டிருந்த வேளையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .