2025 மே 05, திங்கட்கிழமை

முடக்கப்பட்ட கிராமத்தில் 14 பேருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 மே 23 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பில் முடக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவான சின்ன ஊறணி பகுதியில் 155 பேருக்கு இன்று (23) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

இந்தக் கிராம சேவகர் பிரிவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கணடறியப்பட்டதையடுத்து, அப்பகுதி கடந்த 18ஆம் திகதி முதல் முடக்கப்பட்டது.

இந்நிலையில், முடக்கப்பட்ட பகுதியிலுள்ள 155 பேருக்கு இன்று அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக் கண்டறியப்பட்டவர்களை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X