Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 22 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைக்கு முன்னாள் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு முட்டுக்கொடுத்த தமிழ்த் தலைமைகளுமே மக்களுக்கு பதில் சொல்லவேண்டுமென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
வரவு-செலவு திட்டம் ஊடாக, கிராமிய அபிவிருத்தியை நோக்காக் கொண்டு, மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 158 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள், நேற்று (21) வழங்கப்பட்டன.
இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், “கொரோனா தொற்றிலிருந்து நாங்கள் பல பாடங்களைக் கற்றுள்ளோம். எமக்குத் தேவையானதை நாங்கள் உற்பத்திசெய்ய வேண்டும். நாடு தன்னிறைவு அடையவேண்டுமானால் கிராமங்கள் தன்னிறைவுஅடையவேண்டும்.
“அரசாங்கத்தின் ஒன்றரை வருட ஆட்சிக்காலத்தில்தான் இந்த நாடு பொருளாதார பிரச்சினைக்குள் தள்ளப்பட்டது என்று கூறுவது அடிமுட்டாள்தனமான கருத்தாகும்.
“இந்த நாட்டை மாறி மாறி ஆட்சிசெய்யும் அரசுகள் வெளிநாட்டில் கடன்களை தொடர்ச்சியாக முன்னெடுத்த செயற்பாடுகளின் விளைவுதான் இந்த நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினையாகும். பிரச்சினைகள் ஆரம்பிக்கும் காலத்திலேயே விழிப்பாக இருந்திருக்க வேண்டும்.
“இன்று பாணை தூக்கிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் தொடக்கம் கடந்த ஆட்சிக்காலத்தில் முட்டுக்கொடுத்த தமிழ் தலைமைகளிலிருந்து அனைவரும் நாட்டு மக்களுக்கு பொறுப்பான பதில்களை வழங்கவேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago