2025 மே 12, திங்கட்கிழமை

முத்தமிழ் வித்தகரின் சிரார்த்த தினம்

Princiya Dixci   / 2021 ஜூலை 19 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம்

தமிழ் உலகுக்கும் இலங்கை நாட்டுக்கும் பெருமைசேர்த்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினத்தையொட்டி, கிழக்கு மாகாணத்தில் இன்று (19) பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு,கல்லடி, இராமகிருஸ்மிசனின் வளாகத்தில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இன்று காலை வழிபாடுகள் நடைபெற்றன.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.இதன்போது சமாதியில் மலர் தூவப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபைத் தலைவர் க.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து, மட்டக்களப்பு நகரில் உள்ள திருநீற்றுப் பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, சுவாமியின் பாடல்கள் இசைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X