Freelancer / 2022 மே 10 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அக்கரைப்பற்றில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனா வின் வீட்டிற்கு முன்னால் ஒன்று கூடிய இளைஞர்கள் டயரை எரித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது. இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் “கோட்டா கோ ஹோம் கம” மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அக்கரைப்பற்று சாகாம வீதியிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனை கட்சியின் அமைப்பாளருமான பொடியப்பு பியசேனவின் வீட்டிற்கு முன்னால் ஒன்று திரண்ட இளைஞர்கள் வீதியில் டயர்களை போட்டு தீயிட்டதையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். (R)
2 minute ago
12 minute ago
21 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
21 minute ago
48 minute ago