2025 மே 14, புதன்கிழமை

முன்னாள் முதலமைச்சரும் அதிகாரிகளும் நேரடி விஜயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுமார் 193 மில்லியன் ரூபாய் செலவில் நிருமாணிக்கப்பட்டுவரும் ஏறாவூர் நவீன பொதுச் சந்தையின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்காக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டும், இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகளும், இன்று (11) கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இச்சந்தை, அதன் வியாபார நடவடிக்கைகளுக்காக, அடுத்தாண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டு, வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் கையளிக்கப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவே,  இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகளைத் தாம் களத்துக்கு வரவழைத்திருந்ததாக முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார்.

தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்பட்டுள்ளபோதும் நிர்மாணப் பணிகளை முடங்க விடாது தடையின்றி மேற்கொண்டு, வெகு விரைவில் ஏறாவூர் நவீன பொதுச் சந்தை சந்தைக் கட்டடத் தொகுதியைக் கையளித்து உதவுமாறு, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகளை, ஏறாவூர் பொதுச் சந்தை வியாபாரிகள் கேட்டுக்கொண்டனர்.

அனைத்து சமூகங்களும் ஒன்று கூடும் வர்த்தக நகரான ஏறாவூரின் சந்தை வியாபாரிகள் நவீன பொதுச் சந்தை நிர்மாணப்பின் காரணமாக இடம்பெயர நேரிட்டுள்ளதால் அதிக தியாகங்களைச் செய்துள்ளார்கள் என்று, ஏறாவூர் நகர மேயர் இறம்ழான் அப்துல்வாஸித், கள விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகளிடமும் முன்னாள் முதலமைச்சரிடமும் எடுத்துரைத்ததோடு, முடிந்தவரையில் வெகுவிரைவில் பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியை நிறைவு செய்து வியாபாரிகளிடம் கையளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .