2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் எம்.பிக்கள் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

Freelancer   / 2022 மே 15 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அரசியலமைப்புக்கான 20வது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

19வது திருத்த சட்டம் இல்லாமல் செய்யப்பட்டு 20வது திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம் ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் மீண்டும் கிடைக்க பெற்றதே நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சுழ்நிலைக்கு காரணமாகும்.

சில தமிழ் அரசியல் வாதிகளும் 20வது திருத்த சட்டத்துக்கு ஆதரவு வழங்கி இருந்தனர். ஆனால் அவர்களை பிழை சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்து மக்கள் ஆணையை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள்.

20வது திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை காற்றில் பறக்க விட்டிருகின்றார்கள்.

தமிழ், முஸ்லிம் மக்களை காலம் காலமாக எதிரிகளாகவே பார்த்து அரசியல் செய்து வருகின்ற ராஜபக்ஷ அரசுக்கு ஆதரவாக முஸ்லிம்  அரசியல்வாதிகள் கை உயர்த்தி முட்டு கொடுத்ததைதான் சகித்து கொள்ள முடியாது.

புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை மக்களின் எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்லமாகவேனும் நிறைவேற வேண்டும். ஒரே இரவுக்குள் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விட போவதில்லை. 

அதே நேரம் மாமூல் அரசியலை முஸ்லிம் அரசியல்வாதிகள் கை விட வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேரம்பேசுபவர்களாக மாறக் கூடாதெனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X