2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பின்னோக்கி நகர்கின்றது’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 நவம்பர் 07 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தற்போது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பின்னோக்கி நகர்கின்ற ஒரு கவலையான நிலையை நாங்கள் பார்க்க முடிகின்றது” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான எம்.எம்.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில் திங்கட்கிழமை (06) இரவு   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நாட்டில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் எந்த நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டது என்பதை மறந்த நிலையில் ஆட்சியாளர்களும் அதற்குப் பொறுப்பானவர்களும் பயணிக்கின்ற நிலையில் இருக்கின்றோம்.

“நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, இந்த நாட்டில் நல்லாட்சி விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆட்சி முறை மாற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கின்ற கட்சி என்ற வகையில் தொடர்ந்தும் அதனுடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

“நாம் முன்னெடுக்கின்ற ஒவ்வொரு தீர்மானங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும், இந்த நாட்டிலே அர்த்தமுள்ள நல்லாட்சியை உருவாக்க வேண்டுமென்ற இலட்சியத்தை மறந்தது கிடையாது.

“நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர் சந்திக்கின்ற முதலாவது தேர்லாகும். இந்த தேர்தலில், கிழக்கு மாகாணத்தில் பல உள்ளூராட்சி மன்றங்களில் போட்டிட நாம் தீர்மானித்துள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X