Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மார்ச் 13 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை முஸ்லிம் சமூகம், விமர்சனங்களை சாதகமான முறையில் எதிர்கொண்டு, சிறப்பான செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றதென, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.எஸ்.எம். நிராஸ் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் தூண்டி விடப்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எறாவூரிலிருந்து சேகரிக்கப்பட்ட உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்து, பாதிக்கப்பட்ட மக்களுடனும் பள்ளிவாசல் பிரதிநிதிகள், பொது அமைப்புப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர், அவர் இந்தக் கருத்தை இன்று (13) வெளியிட்டார்.
இது பற்றி தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம் சமூக மட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரும் முதலில் விசுவாசத்தின் பற்றோடும், உறுதி குலையாமலும், தளர்ந்து போகாமலும் தங்களைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“அத்துடன், நாட்டின் தலை சிறந்த மனிதர்கள் என்ற நற்பெயரையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
“இந்த விழிப்புணர்வை முஸ்லிம் சமூகத்திலுள்ள எல்லா மட்டங்களுக்கும் ஊட்டவேண்டியிருக்கின்றது.
“தூய இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளை சாதாரண கிராம மக்கள் தொடக்கம், உயர் அதிகாரிகள் வரை கடைப்பிடித்து நடந்தால், இஸ்லாத்தின் மீதும் இந்த நாட்டின் முஸ்லிம்கள் மீதும் ஏனையோர் கொண்டுள்ள காழ்ப்புணர்வு தணிந்து போகவும் அதன் காரணமாக அவர்கள் விழிப்புணர்வு பெறவும் வாய்ப்பேற்படும்.
“எனவே, கிராம மட்ட அபிவிருத்தி தொடங்கி, நகர அபிவிருத்தி வரை இடைப்பட்ட சமூக, கல்வி, அரசியல், பொருளாதார, கட்டுமான, வியாபார, விளையாட்டு, பொழுதுபோக்கு என அத்தனை துறைகளிலும் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.
“இதனூடாகவே முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் பிரதேசங்களும் நெருக்கடிகளைத் தவிர்ந்து கொண்டு நிம்மதியாக வாழ வழியேற்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025