2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம் சிவில் சமூக அமைப்பை உருவாக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2017 ஜூன் 12 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில், முஸ்லிம் சிவில் சமூக அமைப்பொன்றை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என, காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.தௌபீக் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக ஆராயும் கூட்டம், காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகத்தில், இன்று நடைபெற்றது.

முஸ்லிம் சிவில் சமூக அமைப்பொன்றை விரைவாக உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், உலமா சபை ஆகிய சிவில் சமூக அமைப்புகளை உள்ளடக்கியதாக, மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் இந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

தற்போது நாட்டில் இடம்பெற்றுவரும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்  சம்பவங்கள் தொடர்பில், கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள், குரலெழுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இதை மையப்படுத்தியும் பிராந்திய மற்றும் பிரதேச ரீதியாக முஸ்லிம்களுக்கு ஏற்படும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைக் கையாளும் வகையிலும்  பலமான, வினைத்திறன் மிக்கதான  அமைப்பொன்றை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

இந்த அமைப்பானது பிராந்திய, மாவட்ட, மாகாண மட்டங்களில் இன ஐக்கியம் மற்றும்  சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X