Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் தலைவர்கள் பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டுமென, காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் இமாம் மௌலவி எம்.எம்.பாஸில் முப்தி தெரிவித்தார்.
காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனியா பள்ளிவாசலில், இன்று நடைபெற்ற நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இலங்கை முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பின் உச்சக்கட்டமே, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையாகும். முஸ்லிம் என்ற ஒரு காரணத்துக்காக, முஸ்லிம்கள் மீது உலகமெங்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.
“இந்தக் கட்டத்தில்தான் நாம், பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்து கொள்வதுடன், இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும்.
“அதேபோன்று முஸ்லிம் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். முஸ்லிம்கள், பல கொள்கை ரீதியாகப் பிரிந்து செல்லாமல், ஒற்றுமைப்பட்டு, ஏற்படுகின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
9 hours ago