Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முஸ்லிம்களுக்கு ஆபத்தான சட்டத் திருத்தங்களையே ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்துள்ளது. அதற்கு ஆதரவாக, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் இருக்கின்றனர்” என, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
ஏறாவூரில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவுப் பேருரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஏறாவூர் றஹ்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“முஸ்லிம் மக்கள் செய்வதறியாது தவிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற போதும், மாகாண சபை தேர்தல் வருகின்ற போதும் மக்களின் அபிலாசைகள் என்ன என்பதை உணர்ந்து கொள்ளாமல் மக்களின் அபிலாசைகளுக்கு அப்பாற் சென்று தன்னுடைய சுய நலங்களை அடைந்துக் கொள்வதற்காக தங்களுடைய எஜமானர்களை திருப்திபடுத்திக் கொள்வதற்காக றவூப் ஹக்கீம் செயற்படுவார்.
“மறைந்த தலைவர் அஷ்ரபின் கொள்கைக்கு முரணாக முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் செயற்படுகின்றனர்.
“முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களுடைய அபிலாசைகளை அடைவதற்காக வந்த கட்சியாகும். தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் எத்தனை அபிலாசைகளை முஸ்லிம் மக்களுக்கு இந்த முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்துள்ளது.
“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரைக்கும், முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியின் பஸ்ஸில் ஏறாது என மறைந்த தலைவர் அஷ்ரப் தொடர்ந்து பேசினார்.
“தலைவர் அஸ்ரப் ரணில் விக்கிரமசிங்கவை நன்றாக புரிந்திருந்தார். ரணிலின் வெளிநாட்டுக் கொள்கைகள் அவரின் சியோனிசவாத திட்டங்கள் அவர் எதற்கு அடிபணிந்துள்ளார் எதனை செய்வார் என்றெல்லாம் விளங்கி கொண்டவர்தான் நமது தலைவர் அஷ்ரப். கடைசியில் அஷ்ரப் மரணித்து விட்டார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago