Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 21 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இனவாதச் வன்முறைச் சம்பவங்களுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாக இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்தாhர்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கும் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (20) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'அண்மைக்காலமாக இலங்கையில் இடம்பெற்றுள்ள பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களுக்குத் தீ வைத்துச் சொத்துகளை நாசப்படுத்தும் சம்பவங்களை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கின்றது. எந்தவொரு வன்செயலுக்கும் தொடர்ந்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்து வருகின்றது' என்றார்.
'சமாதானத்தையும் ஐக்கியத்தையும் சக வாழ்வையும் முஸ்லிம்கள் விரும்புகின்றார்கள். பல்வேறு நடவடிக்கைகளின்போது, முஸ்லிம்கள் சமாதான தூதுக் குழுக்களாகவும் செயற்பட்டுள்ளார்கள் என்பதையும்; நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.
'இலங்கையில்; ஐக்கியத்தையும் இன நல்லுறவையும் சகோரத்துவத்தையும் நிலை நாட்டவும் முஸ்லிம்கள் பாடுபட்டு வந்துள்ளார்கள். இன்றும் அதற்காக அவர்கள் பாடுபட்டு வருகின்றார்கள்' என்றார்.
'அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இனம், மதம், மொழி பார்;த்து உதவி செய்வதில்லை. சிங்களவர்களோ, தமிழர்களோ, முஸ்லிம்களோ என்று யாராக இருந்தாலும், அமெரிக்கா மனிதாபிமான உதவிகளைச் செய்யும்.
'இலங்கையைப் பொறுத்தவரையிலும்; அமெரிக்கா பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 700 மில்லியன் ரூபாயை அமெரிக்கா வழங்கியது.
இலங்கையின்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களில் கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றிய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது.
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற அனர்த்தங்களின்போதும், அமெரிக்கா உதவி செய்தது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
14 minute ago
28 minute ago