Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 19 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
'முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இனவாதச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்' என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலான தெரிவித்தார்.
மண்முனைப்பற்று, பாலமுனைப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களுக்குத் தீ வைத்த சம்பவங்கள், முஸ்லிம்களின் சொத்தைக் குறி வைத்து அழித்துவரும் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் நிறுவனங்களும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாகச் செயற்பட்டதன் பயனாக, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டவர்கள் ஆளையாள் காட்டிக்கொடுக்கும் நிலைமை இன்று உருவாகியுள்ளது' என்றார்.
'முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் சம்பவங்களைக் கண்டித்து, இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எமது கண் முன்னாலேயே இந்த வன்முறைச் சம்பவங்களைக் கண்டிக்கின்றனர்.
'அதேபோன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தமிழ்த் தலைவர்கள், கிறிஸ்தவ சமூகத்தின் முக்கியஸ்தர்கள், மலையக மக்கள், மலையகத்; தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
'இந்த நிலையிலேயே, எமது பிரச்சினைகளை சர்வதேசம் மற்றும் அரபு நாடுகளின் கவனத்துக்கு நாம் கொண்டு வந்துள்ளோம். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதுவர்களுக்கும் இந்த விடயங்களைத் தெரியப்படுத்தியுள்ளோம்' என்றார்.
'இது, எமது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாகும்.
'இந்த வேளையில் முஸ்லிம்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும். பொறுமையும் பிரார்த்தனையுமே முஸ்லிம்களின் மிகப்பெரிய ஆயுதமாகும்.
'நாம் பிரிந்துவிடாமல், ஒற்றுமையுடன் செயற்பட்டால், எல்லா விடயங்களிலும் வெற்றி பெற முடியும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
33 minute ago
39 minute ago