2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மூதாட்டி கொலை; சந்தேகநபர் கைது

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் 

அம்பாறை, சாய்ந்தமருதில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர், இன்று  (03) அதிகாலை கைது செய்யப்பட்டார்.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸாரால் மட்டக்களப்பில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கல்முனையை வசிப்பிடமாக கொண்டிருந்த 48 வயதுடைய இந்நபர், சாய்ந்தமருது, புதுப்பள்ளி வீதியிலுள்ள வீடொன்றில் தனித்து வசித்து வந்த 83 வயதுடைய சுலைமான் செய்யது புஹாரி என்னும் மூதாட்டியை கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மூதாட்டியிடம் இருந்த நகைகளை அபகரிக்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகி இருந்த சந்தேகநபரை பல நாள்கள் தேடுதலின் பின்னர் சாய்ந்தமருது பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மட்டக்களப்பு விடுதி ஒன்றில் குடும்பத்துடன் தங்கி வாழ்ந்த நிலையில், விடுதி பணியாளர்களாக நடித்தே பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கைதுசெய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .