2025 மே 02, வெள்ளிக்கிழமை

மேய்ச்சல் காணிகளில் குடியேற்றத்தை தடுக்குமாறு கடிதம்

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.சரவணன், வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

மேய்ச்சல் தரைக் காணிகளில், அத்துமீறிய குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈரலக்குளம் 201ஏ கிராமசேவகர் பிரிவில் பெரிய மாதவணை, மாதவணை மயிலத்தமடு, கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை 209டி கிராம சேவர் பிரிவிலுள்ள சின்ன மாதவணை, மயிலத்தமடு போன்ற பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என, அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்ட மேற்படி பிதேசங்கள், வனவள திணைக்களத்துக்குரியதும், மகாவலி வலயத்துக்கும் உட்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பகுதிகதில் பல தடவைகள் பெரும்பான்மை இனத்தைச் சோந்த தனிநபர்களால் குடியேற்றத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அவை ஆரம்பிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மேற்படி அத்துமீறலை தடுத்து, நிரந்தரமாக கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, அக்கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .