2025 மே 02, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

மட்டக்களப்பில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீபிடித்து எரிந்துள்ள நிலையில், அதனை செலுத்திச் சென்றவர் உயிர் தப்பியுள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியிலுள்ள வேதாரணியம் சதூக்கம் பகுதியில், இன்று (08) நண்பகல் 12 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு ஊடாக காத்தான்குடி நோக்கிச் சென்றவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர், அதிலிருந்து குதித்து உயிர் தப்பியுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட தீ குறித்த பகுதியில் நின்றவர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தீ காரணமாக மோட்டார் சைக்கிளின் பெரும் பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .