Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 15 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடத்தில் பிரதான வீதியில் இன்று (15) காலை 9.20க்கு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்து, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உபுல் குணவர்த்தன தெரிவித்தார்.
எருவில், கோடைமேடு கிராமத்தை சேர்ந்த இருவர் தமது மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கையில், ஓந்தாச்சிமடம் கிராமத்தின் உள்வீதியாக வந்த 60 வயதுப் பெண்ணொருவர், பாதையை கவனிக்காமல் கடப்பதற்கு முற்படுகையில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மேற்படி பெண் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 29, 53 வயதுடைய இருவருமாக படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
9 hours ago