Suganthini Ratnam / 2016 நவம்பர் 02 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
யுத்தம் நிலவிய காலத்தில் காணிகளை இழந்தவர்கள் தங்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக சட்ட ஆலோசனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி முதல்; காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில இச்சட்ட ஆலோசனை வழங்கும் நடவடிக்கை நடைபெறவுள்ளது. எனவே, இதற்காக விண்ணப்பித்தவர்கள் அன்றையதினம் தவறாது வருகை தருமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக தங்களின் சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது அச்சுறுத்தல் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கு அமைய விண்ணப்பித்தவர்களுக்கான சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் சிறந்த சட்டத்தரணிகள் மூலமாக வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
3 minute ago
8 minute ago
17 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
17 minute ago
17 minute ago