2025 மே 03, சனிக்கிழமை

யாசகம் கேட்டு திரிவதற்கு தடை

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில், காத்தான்குடி நகரசபை எல்லைக்குள், மறு அறிவித்தல்வரை யாசகம் உட்பட சகல விதமான தர்மக் கொடைகளையும் வீடு வீடாக, கடை கடையாகச் சென்று பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, நகர சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் இந்த அறிவித்தலைக் கடைப்பிடிக்குமாறும், அந்த அறிவித்தலில் காத்தான்குடி நகர வாசிகளை நகர சபை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த அறிவித்தலின்படி, இஸ்லாமிய வழக்கில் ஸகாத், பித்ரா எனப்படும் தர்மக் கொடைகளை வீடுகள், கடை, வீதிகளில் சென்று கேட்டுத் திரிவது உள்ளூர், வெளியூர் பொது மக்கள் என அனைவருக்கும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

நகர சபை விடுத்துள்ள அந்த அவசர அறிவித்தலில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் இந்தக் கால கட்டத்தில் அரசாங்கத்தின்ன் அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பது எம் அனைவர் மீதும் உள்ள தலையாய கடமையாகும்.

இது காத்தான்குடி நகரசபையின் “கொரோனா- வருமுன் காப்போம்” எனும் விசேட வேலைத்திட்டத்தின் முக்கிய அறிவிப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X