2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி ஒருவர் மரணம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 ஜூன் 16 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட கித்துள் மேய்ச்சல் தரைப்பிரதேசத்தில் யானை தாக்கியத்தில் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் மாலை 5.30 மணியளவில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவேளை யானை தாக்கியதில் படுகாயமடைந்த தங்கராசா அர்ஜுன்(27) என்பவர் ஆபத்தான நிலையில் கரடியனாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பண்டாரியா வெளியைச் சேர்ந்த இவர் தற்போது நடைபெற்று வரும் சிறுபோக வேளாண்மை நடவடிக்கைகளுக்காக கால்நடைகளை கித்துள் பிரதேசத்தில் பராமரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X