2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி விவசாயி படுகாயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, சின்னவத்தையில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் சின்னவத்தைக் கிராமத்தைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி செல்லத்துரை (வயது 56) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவர், தனது நெல் வயலைக் காவல் செய்துகொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக காட்டுக்குள்ளிருந்து திடீரென வந்த யானை தன்னைத் தாக்கி, தும்பிக்கையால் தூக்கி வீசியெறிந்ததாக, வாக்குமூலம் அளித்துள்ளார்.

தான் இட்ட கூக்குரலில் அவ்விடத்துக்கு விரைந்து வந்த சக விவசாயிகள், தன்னை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .