2025 மே 21, புதன்கிழமை

யானைகள் தாக்கியதில் கடைக்காரர் பலி

Editorial   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில்  வெலிக்கந்தை எனுமிடத்தில் காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் ஏறாவூர் மிச்நகரைச் சேர்ந்த மஹ்ரூப் முஹம்மத் அனீஸ் (வயது 31) என்பவர், இன்று (1) அதிகாலை உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ரெதீதென்னயில் உணவு விடுதி நடத்தி வந்தவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிகாலை 4.30 மணியளவில் கடைக்குப் பொருட்கள்  வாங்குவதற்காக ரெதீதென்னயிலிருந்து வெலிக்கந்தைக்குச் சென்ற போது, யானைக் கூட்டம் வழிமறித்ததில் அவைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .