Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 21 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, (எம்.எஸ்.எம்.நூர்தீன்
இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கையை, சர்வதேசத்தின் உதவியுடன் அரசாங்கம் துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கோரிக்கை விடுத்தார்.
மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு மென்மேலும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியையும் அரசாங்கம் முனைப்புடன் எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை நிலக் கண்ணிவெடி அபாயமற்ற மாவட்டமாக அறிவிக்கும் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிபோது, 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,
எமது மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் பயணத்தில் சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன. இருந்தபோதும், யுத்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்களின்
வாழ்வாதாரத்தைக்; கட்டியெழுப்பத் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதன் ஊடாக எமது மக்களின் வாழ்வாதார நடவடிக்கையை முழுமையான இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும் என்று நம்புகின்றேன்' என்றார்.
'பௌதீக ரீதியாக எமது மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவது போன்று, இந்த நாட்டில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சமூகங்களுக்கு இடையிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முரண்பாடுகளைக் களைவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், இந்த நாட்டில் சகல இனங்களும் சந்தேகம் மற்றும் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
26 minute ago
34 minute ago