2025 மே 19, திங்கட்கிழமை

யுவதியை கடத்திய சிறிய தந்தை உட்பட இருவருக்கு விளக்கமறியல்

கனகராசா சரவணன்   / 2018 மார்ச் 15 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள துறை நீலாவனை பிரதேசத்தில் யுவதியொருவரை, முச்சக்கரவண்டியில் கடத்திய அந்த யுவதியின் சிறிய தந்தையும் சிறிய தந்தையின் நண்பன் ஆகிய இருவருவரையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா, நேற்று (14) உத்தரவிட்டார்.

துறைநீலாவனையைச் சேர்ந்த 22 வயதுடைய குறித்த யுவதி, செவ்வாய்கிழமையன்று, பிரத்தியோக வகுப்புக்குச் சென்று திரும்பும் போது, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த அவரின் சிறிய தந்தை, நண்பருடன் இணைந்து, வலுக்கட்டாயமாக முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, யுவதியின் உறவினர்கள், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, யுவதி அன்றிரவே மீட்கப்பட்டார் என்பதுடன், கடத்திய இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X