Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வெளியிட்ட கருத்தைக் கண்டித்து, முறாவோடை கிராம மக்கள் சிலரால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால், புதன்கிழமை (16) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன், யோகேஸ்வரன் எம்.பியின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
முறாவோடை சக்தி வித்தியாலய காணி, பரம்பரையாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியென, சீனித்தம்பி யோகேஸ்வரன் எம்.பி ஊடகமொன்றில் கருத்துத் தெரிவித்தார் என்றும், இக்கருத்து, முறாவோடை தமிழ் மக்களைப் புண்படுத்தியுள்ளது என்றும் அக்கருத்தைத் தாம் கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
முறாவோடை சக்தி வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவொன்றில் கலந்துகொண்ட யோகேஸ்வரன் எம்.பி,வித்தியாலயக் காணி பாடசாலைக்குச் சொந்தமானது எனக் கூறிவிட்டு, தற்போது, முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியெனக் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகளால், நாடாளுமன்றத்துக்குச் சென்ற அவர், தமிழ் மக்களுக்கு துரோகமிழைப்பது வேதனையாக உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago