2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ரயிலுக்கு பாய்ந்தவர் மரணம்

Editorial   / 2024 ஒக்டோபர் 25 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில்   32 வயதுடைய வாலிபர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர.

இச்சம்பவம், வியாழக்கிழமை (24)  இரவு 8.25 மணியளவில்) இடம்பெற்றுள்ளது. 

 ஏறாவூரைச் சேர்ந்த எம்என்எம். முஜாஹித் என்பவரே மரணமடைந்தவரென அடையாளங் காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்றுகொண்டிருந்தபோது இவர் திடீரென தண்டவாளத்தில் பாய்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவரது சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தவேளை திடீர் மரணவிசாரணையதிகாரி   எம்.எஸ்.எம். நசிர் அங்கு சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தார். 

அதையடுத்து ஜனாஸா உடல் கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.  ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .