Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த, இருதயபுரம் ஊடாக மாற்றுப் பிரதான பாதையை ஏற்படுத்தி, ரயில் நிலைய ஒழுங்கையை அகலமாக்கிப் புனரமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக, மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்து வரும் வாகன நெரிசல், அதனால் ஏற்படும் வீதி விபத்துகள், உயிரிழப்புகள் என்பவற்றைக் குறைக்கும் வகையிலான மாற்றுப் போக்குவரத்து தொடர்பாக முன்மொழிகள் முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைவாக, திருமலை வீதியூடாக கல்முனைக்குப் பயணிக்கும் வாகனங்கள் ஊறணி சந்தியினூடாகத் திருப்பப்பட்டு, இருதயபுரம், கள்ளியன்காடு, ரயில் நிலைய ஒழுங்கை, கல்லடிப் பாலத்தினூடாகச் சென்றடையும் வகையில் சபையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தவகையில், குறித்த வீதிகளை இரட்டை வழிப் பிரதான போக்குவரத்துப் பாதையாகப் புனரமைக்கும் நடவடிக்கைகளின் முதற்கட்டமாக மட்டக்களப்பு ரயில் நிலைய வீதியையும், எல்லை வீதியையும் இணைக்கின்ற ரயில் நிலைய ஒழுங்கைரய அகலமாக்கி புனரமைப்பதற்காக மேயரால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, அது சபை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பாதை புனரமைப்பு பணிகளுக்காக சுமார் 05 மில்லியன் ரூபாய் வரை மதீப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago