Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மங்கள சமரவீர போன்றோர் முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கரிசனையானது, இந்த நாட்டின் தேசிய நல்லிணக்கத்துக்கு சிறந்த முன் மாதிரியாகுமென, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளரும் ஜம் இய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் தலைவருமான மௌலவி எம்.எஸ்.எம்.தாஸீம் தெரிவித்தார்.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளர் நாயகம் திருமதி சல்மா ஹம்சாவின் கோரிக்கைக்கு அமைய,பார்வை குறைந்தவர்களுக்கான இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, காத்தான்குடியில் நேற்று (2) இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
“ராஜித, மங்கள சமரவீர உட்பட இன்னும் சில அமைச்சர்களின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இவர்கள், இந்த நாட்டில் இன ஒற்றுமையையும் தேசிய நல்லிணக்கத்தையும் கருத்திற்கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
“இவ்வாறான செயற்பாடு, இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் நிலையான சமாதானத்துக்கும் வழிவகுக்கும்.
“ஒருவரை ஒருவர் மதிப்பது, மனிதாபிமான முறையில் நடந்துகொள்வது கருணை மற்றும் அன்பு காட்டுவது இவையெல்லாம் மனிதாபிமானமாகும். இவற்றை நாம் பின்பற்றினால் நாட்டில் ஜயநாயகமும் சகோரதத்துவமும் நல்லிணக்கமும் வளரும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
25 minute ago
26 minute ago